தாட்கோ

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்

குறிக்கோள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் 18 முதல் 55 வயதுக்குட்பட்டவர்களில் கல்வித் தகுதியைப் பொருட்படுத்தாமல் பல்வேறு தொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் தனிநபர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் இருவரும் பயன்பெறலாம்.

மானியம்

  • திட்டச் செலவில் 35% அல்லது ரூ. 3.50 இலட்சம் இவற்றில் எது குறைவோ அத்தொகை முன் விடுவிப்பு மானியமாக வாங்கப்படும்

தகுதி
  • விண்ணப்பதாரர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் 18 -55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்ற தமிழக அரசு திட்டங்களில் இருந்து எந்த மானியமும் பெற்றிருக்க கூடாது.
நிபந்தனைகள்
  • திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்படும்