தேசிய அட்டவணை சாதிகள் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NSFDC) பல்வேறு கடன் அடிப்படையிலான திட்டங்களின் கீழ், பட்டியல் சாதிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு சலுகை வட்டி விகிதத்தில் நிதி உதவி வழங்குவதில் ஈடுபட்டுள்ளது.
நோக்கங்கள்
- ஆதி திராவிடருக்கு முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்கள் மற்றும் பிற பொருளாதார நடவடிக்கைகளை அடையாளம் காணுதல்.
- ஆதி திராவிடர்கள் பயன்படுத்தும் திறன்கள் மற்றும் செயல்முறைகளை மேம்படுத்துதல்.
- சிறு, குடிசை மற்றும் கிராமத் தொழில்களை ஊக்குவித்தல்.
- ஆதி திராவிடர்களின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார நலனுக்கான முன்னோடி திட்டங்களுக்கு நிதியளித்தல்.
- ஆதி திராவிடர்களின் பொருளாதார நல்வாழ்வுக்கான நிதி உதவி ஓட்டத்தை மேம்படுத்துதல்.
- திட்ட தயாரிப்பு, பயிற்சி மற்றும் நிதி உதவி மூலம் இலக்கு குழுவிற்கு அவர்களின் திட்டங்களை அமைப்பதில் உதவி.
- இந்தியாவிலும் வெளிநாட்டிலும் முழுநேர தொழில்முறை மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளை மேற்கொள்வதற்காக ஆதி திராவிடர் இணத்தை சேர்ந்த தகுதியுள்ள மாணவர்களுக்கு கடன்களை நீட்டித்தல்.
- இந்தியாவில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வகுப்புகளைத் தொடர்வதன் மூலம் தகுதியான இளைஞர்களுக்கு அவர்களின் திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்த கடன்களை விரிவுபடுத்துதல்.